ராட்சசன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடக்கம்

ராட்சசன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடக்கம்

கடந்த 2014-ம் ஆண்டு  ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் முண்டாசுப்பட்டி திரைப்படம் வெளியானது. முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்ட இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, 2018-ல் மீண்டும் ஒன்றிணைந்து  ராட்சசன் திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டனர். த்ரில்லர் கதைக்களத்தில் அமைந்த ராட்சசன் திரைப்படம் பிரமாண்ட வெற்றியடைந்தது. தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. 

ராட்சசன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடக்கம்

ராட்சசன் வெற்றியை தொடர்ந்து ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த கூட்டணியில் புதிய படம் உருவாகும் என எதிர்பார்த்த நிலையில், சில பிரச்சனைகளால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் விஷ்ணு விஷால்-ராம் குமார் கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்கி வருகின்றனர். விஷ்ணு விஷாலின் 21-வது படமாக உருவாக உள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்புக்கான முன்னணி வேலைகள் நடைபெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 

Share this story