‘சர்தார் 2’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியது...!

sardhar 2

‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, ராஜிஷா விஜயன், அருண் வெஞ்சுரமுடு, ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சர்தார் 2’. இதன் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சர்தார் 2’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் மைசூர் படப்பிடிப்பின்போது கார்த்தி-க்கு காலில் அடிபட்டதால், படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது அந்த படப்பிடிப்பை முழுமையாக கார்த்தி முடித்துக் கொடுத்துவிட்டார். 

karthi


அடுத்து சென்னையிலும், வெளிநாட்டிலும் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அத்துடன் முழுமையாக படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் கார்த்தி. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. 

Share this story

News Hub