கட்டா குஸ்தி 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

கட்டா குஸ்தி 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது!

நடிகர் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி ரவுண்ட் 2 படத்தின் பூஜை நடைபெற்றது.

Image

செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் கட்டா குஸ்தி. இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். 

குடும்பப் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படம் விமர்சனம் மற்றும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ப்ரோமோ வீடியோவுடன் வெளியிட்டு படக் குழு நேற்று  அறிவித்துள்ளது. இரண்டாம் பாகத்தை விஷ்ணு விஷாலுடன் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இரண்டாம் பாகத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.  தற்போது படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது. படக்குழுவினர் இதில் கலந்துகொண்டு பூஜையுடன் படபிடிப்பை தொடங்கியுள்ளனர். 

Share this story