வசந்த் ரவி நடிக்கும் 7-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

வசந்த் ரவி நடிக்கும் 7-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான வசந்த் ரவி வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரின் அறிமுக படமான தரமணி பலரின் பாராட்டை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து வெளியான ராக்கி மற்றும் அஸ்வின்ஸ் திரைப்படங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் பெற்றன. இதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். ரஜினிக்கு மகனாகவும், எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்திருந்த வசந்த் ரவி ரசிகர்களை கவர்ந்தார். 

வசந்த் ரவி நடிக்கும் 7-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் சப்ரிஷ் நந்தா இயக்கத்தில் ஒப்பந்தமாகினார். இப்படத்தில், மெஹ்ரீன், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.
 
Share this story