பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் கடைசியாக 2022-ம் ஆண்டு வெளியான சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கியிருந்தார். அடுத்து 2 வருடமாக அவர் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வந்தார். இந்தப் படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்.
It's a wrap for our much anticipated Makkal Selvan @VijaySethuOffl - @MenenNithya - @pandiraj_dir entertainer💥
— Sathya Jyothi Films (@SathyaJyothi) February 23, 2025
Get ready for an ultimate wholesome entertainer💚 Exciting updates on your way very soooooon! @iYogiBabu @studio9_suresh #ChembanVinodJose @onlynikil… pic.twitter.com/M2vWLYXTtx
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 19 (1) (ஏ) என்ற மலையாள படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.