லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு தயாராகும் மேடை?... வீடியோ ரிலீஸ்...

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அரங்கை தயார் செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
Yaeh it's old video☺️
— Aíshú🍦(Léõ)🧊🔥 (@AishThalapathy) September 25, 2023
Waiting to see #LeoAudioLaunch set 🥁🥳💥#Leo stage getting ready soon ❤️🔥pic.twitter.com/sNrrlA88oQ
லியோ படத்திலிருந்து ஏற்கனவே, ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பாக அண்மையில் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், சென்னையில் லியோ பட இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக மேடை மற்றும் அரங்கை தயார் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. வரும் 30-ம் தேதி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.