"தண்டேல்" உருவான கதை... வீடியோ வெளியிட்ட படக்குழு..!

thandel


“தண்டேல்” படம் வருகிற 7-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. இதில், சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.
கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் மற்றும் அல்லு அரவிந்த் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.


ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. 'தண்டேல்' படம் வருகிற 7-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ஐஎம்டிபி வெளியிட்டுள்ள மிகவும் எதிர்பார்கப்படும் இந்தியத் திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியலில் தண்டேல் திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், "தண்டேல்" படம் உருவான கதையை வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this story