ப்ரோமோஷனுக்காக தனி விமானத்தில் பறக்கும் ‘பொன்னியின் செல்வன்’ குழுவினர்... இன்று சோழர்களின் விஜயம் எங்கு தெரியுமா ?

ps2

‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் தனி விமானத்தில் ப்ரோமோஷனுக்கு கோவை சென்றுள்ளனர். 

ps2

இரு பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. இதையடுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மணிரத்னத்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

ps2

இதையடுத்து இப்படத்தை ப்ரோமோஷன் செய்யும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளது. இதையொட்டி நேற்று இப்படத்தின் PS Anthem பாடல் வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துக்கொண்டு மாணவர்களுடன் கலகலப்பாக உரையாடினார். 

ps2

இதைத்தொடர்ந்து இன்று கோவை நகரில் ‘பொன்னியின் செல்வன்’ ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக விக்ரம், கார்த்தி, ஜெயம், திரிஷா உள்ளிட்டோர் தனி விமானம் மூலம் கோவைக்கு சென்றனர். அங்கு இன்று ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்காக ப்ரோமோஷனில் ஈடுபட உள்ளனர். விமானத்தில் படக்குழுவினர் இருக்கும் புகைப்பபடங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

ps2

Share this story