’தக் லைஃப்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு....!

கமல்ஹாசன் - மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி உள்ள ’தக் லைஃப்' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ’தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. 'தக் லைப்’ திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா’ பாடல் வெளியிடப்பட்டது. பாடல் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.
அதில், கமல் மற்றும் சிம்பு நடனமாடும் காட்சிகள் ஹைலைட். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இசை வெளியீட்டு விழா, சென்னையில் மே 16ம் தேதி நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எல்லையில் நிலவி வந்த போர் பதற்ற சூழல் காரணமாக இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Thugs March On#Thuglife #ThuglifeTrailer from May 17 #ThuglifeAudioLaunch from May 24#ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR
— Raaj Kamal Films International (@RKFI) May 14, 2025
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan… pic.twitter.com/wkCtEf8A2L
இந்நிலையில், 'THUG LIFE' படத்தின் இசை வெளியீட்டு விழா மே 24ம் தேதி சென்னையில் நடைபெறும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் வரும் 17ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.