ஜப்பான் படத்தின் டீசர் வெளியானது
1697628976858

கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ஜப்பான் படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வௌியிட்டுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் ராஜூ முருகன் கூட்டணியில் தயாராகியுள்ள படம் ‘ஜப்பான்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகவுள்ளது. வித்யாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.