'கண்ணப்பா' படத்தின் டீசர் வெளியானது

வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா' படத்தின் டீசர் வெளியானது.
மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
The wait is over! 🏹
— Kannappa The Movie (@kannappamovie) March 1, 2025
Presenting the much-anticipated Teaser-2 from #Kannappa🏹 — a powerful tale of devotion, courage & sacrifice brought to life on the grand cinematic canvas.
Witness the legend unfold!
🏠 Har Har Mahadev 🔱
Har Ghar Mahadev 🔥
👉 Watch now:
🔗Telugu:… pic.twitter.com/oWZjYLYe4Q
இத்திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். பிரபாஸ் ருத்ராவாகவும், மோகன்லால் கிராதாவாகவும் நடிக்கின்றனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.