ஜெய் நடித்துள்ள லேபிள் தொடரின் டீசர் ரிலீஸ்
தமிழில் 'கனா' மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். 'ராஜா ராணி' உள்ளிட்ட சில படங்களிலும் 'கபாலி' உள்ளிட்ட சில படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.
அடையாளத்தை மாற்றுவதற்கான ஒரு பயணம்! #Label coming soon on #DisneyPlusHotstar #LabelOnHotstar @muthamizh777 @Actor_Jai @Arunrajakamaraj @TanyaHope_offl @keeperharish @Actor_Mahendran @samCSmusic @dineshkrishnanb @Meevinn @sureshmilitary @arishkumar_offl pic.twitter.com/HAED3fsYuF
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) October 18, 2023
அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த தொடருக்கு 'லேபிள்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். மேலும் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க, தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இத்தொடரின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.