எஸ்.பி.பி.யின் ஏஐ குரலால் வந்த சோதனை

எஸ்.பி.பி.யின் ஏஐ குரலால் வந்த சோதனை எஸ்.பி.பி.யின் ஏஐ குரலால் வந்த சோதனை 

அரை நூற்றாண்டுகளாக இசையுலகில் முடிசூடா மன்னாக ஆதிக்கம் செலுத்தி வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆந்திராவில் பிறந்த இவர், இந்திய ரசிகர்களை தனது பாடல்களால் கட்டிப்போட்டு வைத்திருந்தார். 1966ம் ஆண்டு தனது திரையுலக பயணத்தை துவங்கிய எஸ்.பி.பி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காளி என மொழி படங்களில் பாடல்களை பாடியுள்ளார். 1966ம் ஆண்டு தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய எஸ்.பி.பி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். உலகின் அதிக பாடல்கள் பாடிய சாதனை மனிதரும் எஸ்.பி.பிதான்.மேலும் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய சகலகலா வித்தகராகவும் திகழ்ந்தார்.

எஸ்.பி.பி.யின் ஏஐ குரலால் வந்த சோதனை 

இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், ஏஐ மூலம் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் மூலம் பாடல் ஒன்றை பயன்படுத்திய கீடா கோலா பட இயக்குநர் மீது எஸ்.பி.பி.சரண் வழக்கு தொடர்ந்துள்ளார். 

Share this story