லியோ படத்திலிருந்து மூன்றாவது பாடல் வெளியானது
1697029569411

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது படத்திலிருந்து அன்பெனும் எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும் வௌியானது.