சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது

சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.
நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு சித்தா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் இவர் இந்தியன் 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்தது டெஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் சில படங்களிலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் சித்தார்த். இந்நிலையில் தான் குருதி ஆட்டம், எட்டு தோட்டாக்கள் ஆகிய படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படமானது சித்தார்த்தின் 40 வது படமாகும். இந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆச்சர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘3BHK‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை பார்க்கும்போது இப்படம் குடும்பப் பின்னணியில் உருவாகி இருப்பது போல் தெரிகிறது. அடுத்தது இந்த படத்தில் சித்தார்த்தின் அப்பாவாக சரத்குமாரும் அம்மாவாக தேவயானியும் தங்கையாக மீதா ரகுநாத்தும் நடித்திருக்கின்றனர். சைத்ரா ஆச்சர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த டீசரின் இறுதியில் இப்படம் 2025 கோடையில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.