வெற்றிநடை போடும் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.. உலகளவில் எவ்வளவு வசூல் தெரியுமா..?

சசிகுமார், சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 4வது வாரத்தை கடந்துள்ள நிலையில், உலகளவில் ரூ. 75 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் கடந்த 1-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
#TouristFamily Hits 75+ CRORES WORLDWIDE GROSS 💥💥
— Million Dollar Studios (@MillionOffl) May 23, 2025
Overwhelmed with love ❤️
Thank you for making our wholesome family entertainer a worldwide success.
Written & directed by @abishanjeevinth ✨
A @RSeanRoldan musical 🎶@sasikumardir @SimranbaggaOffc @Foxy_here03… pic.twitter.com/D8IT1vIL31
இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் 4 வாரங்கள் கடந்தும் தமிழ் நாட்டில் அதிக ஷோ எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படக்குழுவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலில் கடந்துள்ளது. உலகளவில் 75 கோடி ரூபாய்-க்கு அதிகமாக வசூலை குவித்துள்ளது. கம்மியான பட்ஜெட்-இல் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட மில்லியன் டால்டர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு இப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது.