பிரபல பாடலுக்கு வைப் செய்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' படக்குழு... வீடியோ வைரல்...!

'மம்பட்டியான்' பாடலுக்கு டூரிஸ்ட் பேமிலி படக்குழுவினர் வைப் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் கடந்த 1-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Team #TouristFamily vibing #Mambattiyan song 😍💥 pic.twitter.com/n7UcbsSFAa
— OTT Trackers (@OTT_Trackers) May 24, 2025
இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் 4 வாரங்கள் கடந்தும் தமிழ் நாட்டில் அதிக ஷோ எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. உலகளவில் 75 கோடி ரூபாய்-க்கு அதிகமாக வசூலை குவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஒரு காட்சியில் மம்பட்டியான் பாடல் இருக்கும், அதில் நடிகர் சசிகுமார் தனது இரு மகன்களுடன் நடனமாடும் காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த நிலையில், அந்த பாடலுக்கு படக்குழுவினர் அனைவரும் நடனமாடி வைப் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.