எந்த ஒரு தகவலும் இல்லாமல் வெளியான ட்ரைலர்… படக்குழு சொன்ன அதிர்ச்சித் தகவல்!

எந்த ஒரு தகவலும் இல்லாமல் வெளியான ட்ரைலர்… படக்குழு சொன்ன அதிர்ச்சித் தகவல்!

இந்திய விமானப்படை பெண் விமானியாக இருந்த குன்ஜன் சக்ஸேனாவின் வாழ்க்கைப் படமான ‘குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
எந்த ஒரு தகவலும் இல்லாமல் வெளியான ட்ரைலர்… படக்குழு சொன்ன அதிர்ச்சித் தகவல்!
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்திருக்கும் இந்தப் படத்தை கரண் ஜோஹரின் தர்மா ப்ரொடக்‌ஷன்ஸும், ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. சரண் சர்மா இயக்கியிருக்கும் இந்தப் படம், 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்தின்போது இந்திய ராணுவ வீரர்களைக் காப்பாற்றிய பெண் விமானி குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஏப்ரல் 24-ம் தேதி அன்று தியேட்டர்களில் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.
எந்த ஒரு தகவலும் இல்லாமல் வெளியான ட்ரைலர்… படக்குழு சொன்ன அதிர்ச்சித் தகவல்!
‘குஞ்சன் சக்சேனா’ படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி யூடியூப்பில் வெளியானது. படத்தின் ட்ரைலரில் நடிகர்கள், டெக்னீசியன் என எந்த ஒரு தகவலும் இல்லை. கரண் ஜோஹர் மீது எழுந்து வரும் அரசியல் சர்ச்சையே இதற்குக் காரணம் படக்குழு கூறியுள்ளனர்.
எந்த ஒரு தகவலும் இல்லாமல் வெளியான ட்ரைலர்… படக்குழு சொன்ன அதிர்ச்சித் தகவல்!
யூடியூப்பில் ஒரு டிரெய்லர் வெளியிடப்படும் போது, ​​டிரெய்லர் பற்றிய தகவல்களில் நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பெயர்கள் இருக்கும். ‘குஞ்சன் சக்சேனா’ டிரெய்லரில், கரண் ஜோஹரின் பெயர் மட்டுமல்ல, மீதமுள்ள தகவல்களும் வெளியிடப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது,

வாரிசு அரசியல் பிரச்சினை மீண்டும் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால் எந்த தகவலும் இல்லாமல் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story