லேபிள் தொடரின் ட்ரைலர் வெளியானது

லேபிள் படத்தின் ட்ரைலர் வெளியானது

தமிழில் 'கனா' மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். 'ராஜா ராணி' உள்ளிட்ட சில படங்களிலும் 'கபாலி' உள்ளிட்ட சில படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார். 

அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த தொடருக்கு 'லேபிள்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். மேலும் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இந்த சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், லேபிள் தொடரின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் இது வைரலாகி வருகிறது.
 

Share this story