தி வில்லேஜ் தொடரின் முன்னோட்டம் வெளியானது
சமீபகாலமாக வெப் தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக தமிழில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய வெப் தொடர் ‘தி வில்லேஜ்’. இந்த வெப் தொடரை ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். த்ரில்லர் ஜோனரில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நடிகை வாணிபோஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தியாவில் முதல்முறையாக கிராபிக் நாவலை அடிப்படையாக வைத்து இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. வரும் நவம்பர் 24-ம் தேதி இத்தொடர் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.
Unlock your gateway to fear! #TheVillageOnPrime, Nov 24 only on @PrimeVideoIN
— Karthi (@Karthi_Offl) November 17, 2023
Trailer out now
My best wishes to @arya_offl, @milindrau & Team pic.twitter.com/CkYI2saZFM
இந்நிலையில், இத்தொடரின் முன்னோட்டம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தமிழில் கார்த்தி, இந்தியில் அபிஷேக் பச்சன், தெலுங்கில் ராணா ஆகியோர் முன்னோட்டத்தை வௌியிட்டு உள்ளனர்