வைபவ் நடித்துள்ள 'பெருசு' படத்தின் ட்ரைலர் ரிலீஸ்...!

perusu

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள 'பெருசு' படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ரெட்ரோ' எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது மே 1-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனராக மட்டுமில்லாமல் தனது ஸ்டோன்பென்ச் நிறுவனத்தின் மூலம் பல படங்களையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வருகிறார். அதன்படி,  தற்போது  வைபவ் வைத்து பெருசு எனும் படத்தை தயாரித்துள்ளார். இதில், வைபவ்-ன் சகோதரர் சுனில், சாந்தினி, நிஹாரிகா, பாலா சரவணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகும் இப்படம் வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


பெருசு' படத்திற்கு தணிக்கை குழுவினர் 'ஏ' சான்றிதழ் வழங்கியதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். 


  

Share this story