வள்ளி மயில் படத்தின் முன்னோட்டம் வெளியானது

வள்ளி மயில் படத்தின் முன்னோட்டம் வெளியானது

இயக்குநர் சுசீந்திரன் மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணியில் 'வள்ளி மயில்' என்ற புதிய படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் பாரதிராஜா, சத்யராஜ் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  தெலுங்கு நடிகை ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். டி இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 80-களின் நாடகக்கலை பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. 

தெலுங்கில் 'ஜதிரத்னலு' படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ஃபரியா அப்துல்லா வள்ளி மயில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். படத்தில் அவரது கதாபாத்திரம் தான் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியானது. 

Share this story