டீசரை வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்த ‘தி வில்லேஜ்’ படக்குழு.
1699521274140
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள இணைய தொடரான ‘தி வில்லேஜ்’ தொடரின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள படம் ‘தி வில்லேஜ்’. இந்த படத்தில் திவ்யா பிள்ளை, நரேன், ஜான் கொக்கேன், தலைவாடல் விஜய் என பலர் நடித்துள்ளனர். கிராஃபிக்ஸ் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த தொடர் ஹாரர் பாணியில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது வெப்தொடரின் டீசர் வெளியாகியுள்ளது. சுமார் 15 நொடிகள் கொண்ட இந்த டீசர் தொடரின் மீதான எதிர்பார்பை கூட்டியுள்ளது. அதனுடன் அமேசான் ஓடிடி தளத்தில் வரும் 24ஆம் தேதி தொடர் வெளியாவதையும் அறிவித்துள்ளனர்.