திருமண தேதியே அறிவிக்கவில்லை.. அதற்குள் ப்ரீ-வெட்டிங் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை..!

sobitha


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, பிரபல நடிகை சோபிதாவை திருமணம் செய்ய இருப்பதாகவும், சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் என்று கூறப்பட்டாலும், இன்னும் திருமண தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் சோபிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரீ-வெட்டிங் குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.‘Pasupu Danchadam’ என்ற நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதாக கூறியுள்ள சோபிதா, இது குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதனை அடுத்து "எப்போது திருமணம்?" என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இதனால் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த புகைப்படங்கள் பதிவு செய்து சில நிமிடங்களே ஆகியுள்ள நிலையில் நடிகை த்ரிஷா உள்பட 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story