உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது கேப்டன் சொன்ன அந்த வார்த்தை - ஸ்ரீகாந்த்

உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது கேப்டன் சொன்ன அந்த வார்த்தை - ஸ்ரீகாந்த்

நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இதையடுத்து சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சென்னை தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வருகிறது. மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் இறுதி சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. உடல் அடக்கத்தில் முக்கிய பிரமுகர்கள், விஜயகாந்தின் குடும்பத்தினர் என மொத்தம் 200 பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது கேப்டன் சொன்ன அந்த வார்த்தை - ஸ்ரீகாந்த்

இந்நிலையில் தான் தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அவர் விஜயகாந்த் குறித்து உருக்கமான தகவலை பகிர்ந்து கொண்டார். இதே டிசம்பர் மாதம் தான் நான் ஒருமுறை உயிருக்கு போராடி கொண்டிருந்தேன். அப்போது சூட்டிங்கில் இருந்த விஜயகாந்த் கேமராமேனை அழைத்து, ‛‛அந்த தம்பி காசு வைத்திருப்பானா என தெரியவில்லை. மருத்துவமனைக்கு சென்று ஆபரேஷனுக்கு உதவி செய்யுங்கள். விமானத்தில் அழைத்து கூட சிகிச்சை அளியுங்கள்’’ என கூறினார்.

Share this story