‘ஜெயிலர்’ - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை.

photo

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தை வெளியிட தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

photo

அதாவது, “ ஜெயிலர் ஆடியோ இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் அவர்கள், அனைவரும் திரையரங்குக்கு வந்து படம் பாருங்கள் என்று பேசியுள்ளார். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்களிலும் ஜெயிலர் படம் திரையிட ஆவலாக உள்ளனர். அதனால் சூப்பர் ஸ்டார் அவர்கள் தமிழகத்தில் உள்ள எல்லா திரையரங்கங்களிலும் ஜெயிலர் படத்தை திரையிட ஆவண செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.” என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயளாலர் ரோகிணி பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share this story