புயல் காரணமாக நாளை திரையரங்குகளில் காட்சிகள் ரத்து

புயல் காரணமாக நாளை திரையரங்குகளில் காட்சிகள் ரத்து

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒரு நாள் சென்னையில், திரைப்பட காட்சிகள் ரத்து செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.வங்கக்கடலில் மிக்‌ஜாம் புயல் உருவாகியுள்ளது. புயல் காரணாக, இன்றும் நாளையும் செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காற்று பலமாக வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வானிலை மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் வெளியே செல்ல முடியாத நிலையில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளையும் ரத்து செய்வது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். புயல் நேரத்தில் திரையரங்குகள் செயல்படுவது சரியானது அல்ல என்பதால், இந்த ஆலோசனை நடத்தப்படுகிறது. 

Share this story