ஜிகர்தண்டா 2 படத்திலிருந்து தீக்குச்சி வீடியோ பாடல் வெளியானது

ஜிகர்தண்டா 2 படத்திலிருந்து தீக்குச்சி வீடியோ பாடல் வெளியானது

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. நீண்ட இடைவேளைக்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜின் படம் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு போட்டியாக களமிறங்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் ஈட்டியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. படம் முதல் நாளில் 2.5 கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து தீபாவளி பண்டிகை என்பதாலும், இந்த படத்துக்கு போட்டியாக வெளியான ஜப்பான் எதிர்பார்த்த விமர்சனத்தை பெறாததாலும் ஜிகர்தண்டா படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. அதன்படி படம் இரண்டாவது  நாளில் 4.5 கோடியை வசூலித்து மாஸ் காட்டி வருகிறது. தற்போது 50 கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூலித்துள்ளது.

இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலிருந்து தீக்குச்சி என்ற பாடலின் காணொலி வெளியாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
 

Share this story