அப்பா - மகள் பாசம் பேசும் ‘வாலு பார்ட்டி’.. ஜெய்யின் ‘தீராக் காதல்’ வீடியோ பாடல் !

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தீராக் காதல்’ படத்தில் இருந்து ‘வாலு பார்ட்டி’ வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தீராக் காதல்’. இந்த படத்தை ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கி வருகிறார். ரொமான்டிக் டிராமா வகையில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் முதல்முறையாக நடிகர் ஜெய் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் இரண்டாவது கதாநாயகியாக ஷிவதா நடித்துள்ளார். இவர்களுடன் பேரி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவி வர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார்.
மூன்று பேரை சுற்றி நடக்கும் சம்பவங்களை வைத்து இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து ‘வாலு பார்ட்டி’ என்ற வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அப்பா - மகள் பாசத்தை பற்றி பேசும் இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Here is #VaaluParty from #TheeraKaadhal
— Only Kollywood (@OnlyKollywood) May 15, 2023
?? https://t.co/D7PXFykQDD
Music @Music_Siddhu ??
Lyricist @anu_lyricist ??
Singer(s) @dsathyaprakash #PrarthanaSriram ??#??????????? ??????
?? @rohinv_v ?? @Actor_Jai @aishu_dil @SshivadaOffcl @VriddhiVishal ?? @Music_Siddhu ??… pic.twitter.com/r3KwZkSrvd