மெலோடியாய் உருவாகியுள்ள ‘உசிராங்கூட்டில் பாடல்’... ‘தீராக் காதல்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

Theera Kaadhal

ஜெய் நடிப்பில் உருவாகி வரும் ‘தீராக் காதல்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. 

நடிகர் ஜெய் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘தீராக் காதல்’. இந்த படத்தை ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக ஷிவதா நடித்துள்ளார். 

Theera Kaadhal

இவர்களுடன் பேரி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவி வர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் டிராமா வகையில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. 

Theera Kaadhal

மூன்று பேரை சுற்றி நடக்கும் சம்பவங்களை வைத்து இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. மெலோடி பாடலாக உருவாகியுள்ள இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை சத்யபிரகாஷ் பாடியுள்ளார். 

 

 

Share this story