`தீயவர் குலை நடுங்க' படத்தின் முதல் பாடல் வெளியீடு
1743773716000
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள `தீயவர் குலை நடுங்க' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நடித்து வெளியான சுழல் 2 வெப் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக `தீயவர் குலை நடுங்க' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான தினேஷ் லக்ஷ்மனன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் அர்ஜுன், ராம்குமார் சிவாஜி, ஜிகே ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்ஸ்டர் ராகுல் மற்றும் தங்கதுரை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ஜி அருள் குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான 'அந்திபேர அழகலியே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

