‘SK 25’ படத்தில் நிச்சயம் 3 ஹிட் பாடல் இருக்கு.. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஓபன் டாக்..!

gvprakash

இசையமைப்பாளர் ஜி.வி, பிரகாஷ், SK 25 படம் குறித்து பேசி உள்ளார்.


சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் திரைப்படம் தான் SK 25. இந்த படம் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படம் என்பதால் தற்காலிகமாக SK 25 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

sk25

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஜனவரி 29) மாலை 4 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் இந்த படத்திற்கு பராசக்தி 1965 என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த படம் குறித்து பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் பேட்டி அளித்துள்ளார்.



அதன்படி அவர் கூறியதாவது, “அமரன் படத்திற்கு பிறகு நானும் சிவகார்த்திகேயனும் மீண்டும் இணைகிறோம். அடுத்தது சுதா கொங்கரா படத்தில் மீண்டும் பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் முதல் தேசிய விருது அவர்தான் வாங்கி கொடுத்தார். இது ஸ்பெஷலான ப்ராஜெக்ட். இந்த படத்தின் பாடல்கள் அருமையாக வந்துள்ளது. ஏற்கனவே நான்கு பாடல்கள் பதிவு செய்துவிட்டோம். கண்டிப்பாக இந்த படத்தில் 3 பிளாக்பஸ்டர் பாடல்கள் இருக்கும். அருமையான தலைப்பு வந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Share this story