சினிமாவில் மனிதநேயம் இல்லை : நடிகை நித்யா மேனன்
தமிழ் , மலையாளம் என இரு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழில் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் இவருக்கு பெரிய ஓப்பனிங்காக அமைந்தது . தனுஷூடன் இவர் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள காதலிக்க நேரமில்லை , தனுஷ் இயக்கியுள்ள இட்லி கடை ஆகிய படங்களில் நடித்துள்ளார். காதலிக்க நேரமில்லை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பல்வேறு கருத்துகளை நித்யா மேனன் பேசி வருகிறார். அப்போது இயக்குநர் மிஸ்கின் குறித்து அவர் பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
— Amuthabharathi Videos (@Videos2345) January 11, 2025
மிஸ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நித்யா மேனன் பகிர்ந்துகொண்டார் " சினிமாவில் பொதுவாக ஒரு மனிதநேயமற்ற தன்மை இருக்கிறது. உங்களுக்கு என்னதான் உடல் நிலை சரியில்லை என்றாலும் நிங்கள் வந்து நடித்து கொடுத்துதான் போகவேண்டும். அதற்கு நாங்களும் பழகி விடுகிறோம். சைக்கோ படப்பிடிப்பின் போது எனக்கு உதயநிதியுடன் முதல் நாள் ஷாட் இருந்தது. அன்று எனக்கு பீரியட்ஸ் முதல் நாள் என்பதால் வலி அதிகமாக இருந்தது. நான் படப்பிடிப்பிற்கு தாமதமாகதான் போனேன். போனதும் மிஸ்கினிடம் பீரியட்ஸ் என்றேன். எனக்கு பீரியட்ஸ் என்று முதல் முறையாக நான் சொன்ன முதல் ஆண் இயக்குநர் மிஸ்கின் தான். நான் சொன்னதும் அவர் உடனே முதல் நாளா சரி நீ எதுவும் பண்ண வேண்டாம் போய் ரெஸ்ட் எடுனு சொல்லிட்டார். ஒரு இயக்குநர் நம்மை புரிந்துகொண்டு அப்படி சொல்வது எவ்வளவு ஆறுதலாக இருக்கும் தெரியுமா. மிஸ்கின் தனது கலையை ரொம்ப தீவிரமாக நேசிப்பவர். அதற்கான மரியாதையையும் அவர் கொடுப்பவர்." என நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.