நல்ல படத்திற்கு இடமில்லை - பாடலாசிரியர் பிரியன்

நல்ல படத்திற்கு இடமில்லை - பாடலாசிரியர் பிரியன்

தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில்  பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் அரணம். மாறுபட்ட ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அதில் பேசிய பாடலாசிரியர் பிரியன், அரணம் ஒரு பெரும் தவம். இப்படம் எனக்கு மிகப்பெரும் அனுபவம். 20 ஆண்டுகள் சினிமாவில் இருப்பவனையே இந்த அளவு அடிக்கிறார்கள் என்றால், புதிதாக சினிமாவுக்கு வருபவர்களை என்ன என்ன செய்வார்ள்? என தெரிவித்திருந்தார். 

நல்ல படத்திற்கு இடமில்லை - பாடலாசிரியர் பிரியன்

மேலும், நல்ல திரைப்படங்களுக்கு தற்போது இடமில்லை. ஒரு பெரிய படம் வந்தால் நன்றாக ஓடும் சிறிய திரைப்படங்களை எடுத்து விடுகின்றனர். ஆயிரம் தியேட்டரிலும் ஒரே படம் தான் ஓடுகிறது என்று தெரிவித்தார். 
 

Share this story