தாய்லாந்தில் கல்யாணம் நடக்கவில்லை... நடிகை வரலட்சுமி திருமணம் இந்தியாவில் தான் நடந்தது - பயில்வான் கூறிய அதிர்ச்சி தகவல்..!

1

பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். பொதுவாகவே பயில்வான் ரங்கநாதன் வீடியோ பேசினாலே அதில் நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை பேசி  மோசமான கருத்துக்களை கூறி வருவார்.

இந்நிலையில், வரலட்சுமி திருமணம் இந்தியாவில் தான் நடந்தது என்றும் அதுவும் சென்னையில் தான் நடந்தது என்றும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரலட்சுமி திருமணம் தாய்லாந்தில் உள்ள ரிசார்ட்டில் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அவரது திருமணம் எங்கே நடந்தது என்பது இன்னும் மர்மமாக உள்ளது. ஏனெனில் திருமணம் குறித்த எந்த புகைப்படமும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் நேற்று சென்னையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மட்டுமே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோவில் தாய்லாந்தில் திருமணம் நடத்தினால் இந்தியாவில் அந்த திருமணம் செல்லாது என்பதால் தான் வரலட்சுமி அதிரடியாக முடிவெடுத்து சென்னையில் திருமணத்தை நடத்தியதாகவும் ஆனால் சென்னையில் நடந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறினார்.

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு வரலட்சுமி அம்மா சாயாதேவி கூட வரவில்லை என்றும் அதனால் வரலட்சுமி மிகவும் அதிருப்தி அடைந்ததாகவும் கூறினார். மேலும் வரலட்சுமி கணவர் நிக்கோலாய் நினைத்திருந்தால் மும்பையில் திருமணம் நடத்தி இருக்கலாம் ஆனால் சென்னையில் திருமணத்தை நடத்தியது ஏன் என்று தெரியவில்லை என்றும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதனின் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் வரலட்சுமி திருமணம் எங்கே நடந்தது என்பதை இன்னும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story