காக்கா, கழுகு என அடித்துக்கொள்வதில் ஒரு பயனும் இல்லை - லெஜண்ட் சரவணன்

காக்கா, கழுகு என அடித்துக்கொள்வதில் ஒரு பயனும் இல்லை - லெஜண்ட் சரவணன்

தனது கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரவணன் அருள்.  அதனை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா உடன் ஜோடிபோட்டு நடித்து ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. 

காக்கா, கழுகு என அடித்துக்கொள்வதில் ஒரு பயனும் இல்லை - லெஜண்ட் சரவணன்

இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகக் கட்டடத்தினை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்விக்கான ஊக்க தொகையினை அவர் வழங்கினார். அப்போது பேசிய அவர் காக்கா, கழுகு அடித்துக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை, உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Share this story