தெறி ரீமேக் படத்திற்கு பேபி ஜான் என தலைப்பு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘தெறி’. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், நடிகை மீனா மகள் நைனிகா, இயக்குநர் மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்த இந்தப் படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. விஜய் நடித்த கேரக்டரில் வருண் தவண் நடிக்கிறார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தை சினிஒன் ஸ்டூடியோஸ் சார்பில் முரட் ஹெதேனியுடன் இணைந்து ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் சார்பில் அட்லியின் மனைவி ப்ரியா தயாரிக்கிறார். ஜீவா நடித்த கீ படத்தை இயக்கிய காளீஸ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.
nullA A Y A #BabyJohn
— Keerthy Suresh (@KeerthyOfficial) February 5, 2024
Worldwide release on May 31st 2024.
Click here to watch the video https://t.co/iDhMhCUkop @Varun_dvn @Atlee_dir @priyaatlee @MuradKhetani@GabbiWamiqa @kalees_dir @sumitaroraa @MusicThaman @jiostudios@Cine1Studios @aforapple_offcl@amul_mohan… pic.twitter.com/OaDtAnNieV
இப்படத்திற்கு பேபி ஜான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தலைப்பின் வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. வரும் மே மாதம் திரைப்படம் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.