தெறி ரீமேக்... வருண் தவான் நடித்த 'பேபி ஜான்' ரிலீசுக்கு முன்பே சாதனை

baby john

இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்தத்  திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிகத்துள்ளனர்.

திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டீசர்  நேற்று வெளியானது. படத்தின் டேஸ்டர் கட் என அழைக்கப்படும் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  அதிரடி ஆக்ஷன் காட்சிகளை கொண்டு தெறி படத்தின் காட்சிகள் இடம் பெற்று டீசர் அமைந்துள்ளது. தற்பொழுது படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், டீசர் வெளியான ஒரே நாளில் அதிகம் பார்க்கப்பட்ட டீஸர் என்ற சாதனையை படைத்துள்ளது. 



 

Share this story