இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற தெருக்குரல் அறிவு & இசைக்குழு
1733062136808
ராப் பாடகர் தெருக்குரல் அறிவு இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இயக்குநர் பா. ரஞ்சித்தின் காலா படத்தில் பாடகராக அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு. லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டாணியில் உருவான மாஸ்டர் படத்தில் உருவான வாத்தி ரெய்டு பாடல் உலகமெங்கும் புகழ் பெற்றது. பிறகு அவரது இசையில் உருவான எஞ்சாமி பாடலும் அவருக்கு புகழினை கொடுத்தது. இந்த பாடல் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர் அறிவுக்கும் பிரச்சினை வெடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தெருக்குரல் அறிவு அவரது இசைக்குழு உடன் இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றார் .