காதலரை பிரிந்த ‘பிரியா பவானி ஷங்கர்’ – காரணத்தை புட்டு புட்டு வைத்த சர்ச்சை பிரபலம்.

photo

செய்திவாசிப்பாளராக இருந்து சின்னத்திரைக்குள் நுழைந்தவர் பிரியா பவானி ஷங்கர். தொடர்ந்து வெள்ளிதிரையில் காலடி எடுத்துவைத்து அங்கும் கொடிகட்டி பறந்து வருகிறார். இப்படி பிசியாக நடிகையாக வலம் வரும் பிரியா,  சமீபத்தில் கடற்கரையோரம் புதிய வீடுவாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார்.

photo

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவியது. தொடர்ந்து ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து, வாழ்வில் ஏறுமுகத்தை சந்தித்தார்.  இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவரது வாழ்வில் புயல் வீசி, தற்போது பிரியா தனது காதலரை பிரிந்து தனிமையில் வாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாது இவர்களது பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து  சர்ச்சை நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

photo

அதாவது தற்போது லிவ்விங் டு கெதர் வாழ்வில் இருவரும் உள்ளனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு விலகும்படி காதலன் கூறியதாகவும்,ஆனால்  பிரியாவோ திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால்,இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக பயில்வான் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் தான் நினைத்த மாதிரி தனது காதலர் இல்லை என பிரியா தனது தோழிகளிடம் புலம்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Share this story