‘விமர்சனம்மா.... பண்றீங்க……’ ப்ளு சட்டை போன்ற ஆட்களை விளாசி தள்ளிய 90’ஸ் கிட்ஸ்ஸின் ஃபேவரைட் ‘திரைவிமர்சனம், சுரேஷ் குமார்’.

photo

இன்றைய காலத்தை பொறுத்தவரை செல்போன் மனிதனின் மூன்றாவது கையாக மாறியநிலையில் சமூகவலைதளம் வாழ்வில் தவிற்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக யூட்யூப்பில் கணக்கு தொடங்காத ஆட்களே இல்லை எனலாம்.

photo

ஆம் சினிமாவில் நடிகை தடுக்கி விழுந்தால் கூட அதை வைத்து கண்டென்ட் பார்க்கும் நபர்கள் தங்களுக்கு தெரிந்த சிலபல வித்தைகளை வைத்து திரைவிமர்சனம் செய்து வருகின்றனர். இந்த ஆலமரத்திற்கெல்லாம் விதை போட்ட 90’ஸ் கிட்ஸ்ஸின் ஆஸ்தான விமர்சகரான ‘திரைவிமர்சனம் சுரேஷ் குமார்’ தற்போது தற்கால விமர்சகர்கள் குறித்து தடாலடி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

photo

அதில் அவர் கூறியதாவது, “ முன்னடியெல்லாம் ஒரே ஒரு விமர்சனம் தரமாக வரும் போதெல்லாம் மக்கள் எங்கள் விமர்சனத்திற்காக காத்திருந்தனர், வியாழன், வெள்ளியில் படம் வந்தால் கூட மக்கள் ஞாயிறு வரை விமர்சனத்திற்காக காத்திருந்து பின் படத்தை  பார்த்த கூட்டமெல்லாம் உண்டு. அப்பவும் முதல் வாரத்தில் நாங்கள் விமர்சனத்தை தவிர்த்து புது வரவு என குறிப்பிட்டு அடுத்தடுத்த வாரங்களில்தான் விமர்சனம் கூறுவோம்.  எங்கள் விமர்சனத்தால் ஓடாத படங்களும் ஓடின ஆனால் இன்று, நன்கு ஓடக்கூடிய படங்களும் ஓடவில்லை காரணம் தரமற்ற விமர்சனம். தயவுசெய்து விமர்சனம் கூறுபவர்கள் திரைதுறையை சார்ந்த ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை ஆழமாக கற்றுகொண்டு மற்ற துறை குறித்து ஓரளவாவது தெரிந்து கொள்ளுங்கள். தனிபட்ட மனிதனின் விமர்சனத்தை கூறாமல் ஒரு நான்கு அல்லது ஐந்து ஷோ பார்த்து ரசிகர்களில் வெளிப்பாடை கிரகித்து விமர்சனம் சொல்லவேண்டும்.”இவ்வாரு அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.


 

Share this story