‘திருச்சிற்றம்பலம்’ வெளியாகி ஓராண்டு நிறைவு... நித்ய மேனனுடன் இணைந்து கொண்டாடிய தனுஷ் !

Thiruchitrambalam

‘திருச்சிற்றம்பலம்’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவுபெற்றதை நடிகர் தனுஷ் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

Thiruchitrambalam

யாரடி நீ மோகினி, குட்டி ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர்  இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், இயக்குனர் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகிய மூவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

Thiruchitrambalam

அதோடு ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய இவரும் கதாநாயகியாக நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. 

Thiruchitrambalam

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியான இப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது. இதை தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று கொண்டாடினார். இந்த நிகழ்வில் தனுஷூடன் இணைந்து நடிகை நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

 


 


 

Share this story