100 மில்லியன் பார்வையாளர்கள்.. சாதனை படைத்த ‘தாய் கிழவி’ பாடல் !

thaai kelavi

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘தாய் கிழவி’ பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன்’, ‘குட்டி’ ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மித்ரன் ஜவஹர் மற்றும் தனுஷ் கூட்டணி இணைந்த ‘திருச்சிற்றம்பலம்’. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கூட்டணி இணைவதால் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

thaai kelavi

இந்த படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன்  பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

thaai kelavi

இந்த படத்தில் அனிரூத் இசையில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தது. அதில் ‘தாய் கிழவி’ பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த பாடலை எழுதி, பாடியும் இருந்தார் நடிகர் தனுஷ். இந்நிலையில் இந்த பாடலை யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். 

Share this story