'அருள் நிதி'யின் ஆக்ஷன் அதிரடியில் தயாராகியுள்ள ‘திருவின் குரல்’ படத்தின் டிரைலர் வெளியீடு.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களுள் ஒருவர் அருள் நிதி. அந்த வகையில் இவரின் அட்டகாசமான நடிப்பில் தயாராகியுள்ள ‘திருவின் குரல்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
லைக்கா தயாரிப்பில் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் திரைப்படம் ‘திருவின் குரல்’. இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து முன்னணி இயக்குனர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகியாக ஆத்மிகா நடித்துள்ளார். சாம் சி எஸ் இசையமைப்பில் தயாராகியுள்ள இந்த படத்திற்கு சின்டோ போதுதாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தந்தை மகன் பாடத்தை மைய்யமாக வைத்து தயாரான படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி எதிர்பார்பை அதிகரித்துள்ளது. படம் இம்மாதம் 14அம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தகக்து. ஏற்கனவே சாகுந்தலம், ருத்ரன், தமிழரசன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் தற்போது ’திருவின் குரல்’ படமும் இணைந்துள்ளது