‘ஏகே 62’ படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலக இதுதான் காரணமாம்!.. - சைலெண்டாக வேலை பார்க்கும் விக்கி.

photo

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த பொங்களுக்கு வெளியான ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. இந்த படத்தஒ தொடர்ந்து அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்குநர் விக்னஷ் சிவன் இயக்குவதாக இருந்து பின் இயக்குநர் மகிழ் திருமேனி தான் இயக்க போவதாக தகவல் வெளியானது.  இந்த நிலையில் என்ன காரணத்திற்காக விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகினார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

photo

விக்னேஷ் சிவன் கூறிய கதை ஏகே 62 பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை என்ற தகவல்  பரவியது. அந்த சமயத்தில் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்த அஜித்தின் டிபியை அகற்றிவிட்டார்.  மேலும் பயோவில் இருந்த ஏகே 62-வை தூக்கிவிட்டு விக்கி 6 என மாற்றி  அப்படத்தில் இருந்து விலகியதை அறிவித்தார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த விக்கி அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக தனது அடுத்த படத்திற்கான வேலையை சைலெண்டாக தொடங்கியுள்ளாராம்.

photo

இது ஒருபுறம் இருக்க விக்னேஷ் சிவன் தனது கதையில் அதிகபடியான அக்ஷன் காட்சிகளை வைக்கவில்லையாம், அவர் படத்திற்கு தேவையான ஆக்ஷம் காட்சியை மட்டும் வைத்தாராம், மேலும் கதையில் இதற்காக மாற்றம் செய்ய இயலாது என்றதாலும் தான் படத்தின் இயக்குநரை தயாரிப்பு நிறுவனம் மாற்றினார்களாம்.

Share this story