‘இதுதான் சரியான அறிமுகம்’ - மாளவிகா மோகனன் மகிழ்ச்சி
தமிழ், மலையாளம், இந்தி படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன், பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘த ராஜா சாப்’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
இதுபற்றி கூறியுள்ள அவர், “சரியான படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாக வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக நீண்டகாலமாகக் காத்திருந்தேன். இப்போது பிரபாஸ் பட வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதை விட சிறப்பான அறிமுகம் எதுவும் எனக்கு அமையாது என்று நினைக்கிறேன். இந்த ரொமான்டிக் காமெடி படம் அனைத்து பார்வையாளர்களுக்கும் பிடிக்கும். படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த வருடம் எப்ரலில் படம் வெளியாகும். ரசிகர்களைப் போலவே ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
‘த ராஜா சாப்’ படத்தை மாருதி இயக்குகிறார். இதில் நித்தி அகர்வால், சஞ்சய் தத், வரலட்சுமி சரத்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் தமிழ், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது.