இந்த முறையும் மொத்த பழியையும் மீனா மீது போட்டு தப்பித்த விஜயா!

1
சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.அதில் வீட்டுக்கு வந்த முத்து, வெளியே கிளம்ப வெளிக்கிட மனோஜையும் ரோகிணியையும் வைத்து வாசல் கதவை  பூட்டிவிட்டு எல்லோரையும் அழைத்து நகையைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்.

அதன்படி மீனாவின் நகையை அண்ணாமலையிடம் காட்டி பாட்டியின் பிறந்த நாளுக்கு இத வச்சு செயின் வாங்க போனோம். ஆனால் அங்கு இது கவரிங் நகை என்று சொல்லிட்டாங்க.. இந்த நகை எப்படி கவரிங்கா மாறுச்சு என எனக்கு இப்ப தெரிஞ்சாகணும் என முத்து கேட்கின்றார்.

அதற்கு அண்ணாமலை விஜயாவிடம் உன்னட்ட தானே நகை இருந்துச்சு. என்ன நடந்தது என கேட்க, மீனா தரும்போது அது கவரிங் நகையா தான் இருந்துச்சு என பழியைத் தூக்கி மீனா மேலே போடுகிறார். இதை கேட்ட மீனா அத்தை தேவையில்லாம பழி போடாதீங்க என்று சொல்லவும்,  உங்க அம்மா வீட்டுல இருந்து தான் நகை மாறுச்சு என அடித்து கூறுகிறார் விஜயா.

இதனால் அங்கு இருந்த ஸ்ருதி, போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா என கேட்ட,  விஜயாவும் மனோஜூம் முழுசுகிறார்கள். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. எனவே அடுத்து வரும் நாட்களில் விஜயா மனோஜ் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்வார்களா?  இல்லை மீண்டும் மீனா மீது பழியை போட்டு அப்படியே இந்த சம்பவத்தை ஆப் ஆக்கி  விடுவார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this story