ரஜினி படத்தில் மூன்று கதாநாயகிகள்... லைகா அறிவிப்பு

ரஜினி படத்தில் மூன்று கதாநாயகிகள்... லைகா அறிவிப்பு

ரஜினிகாந்தின் 170-வது திரைப்படத்தில் மூன்று நடிகைகள் இணைந்துள்ளதாக படக்குழு அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. 

ரஜினி படத்தில் மூன்று கதாநாயகிகள்... லைகா அறிவிப்பு

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் இருக்கும் படம் தலைவர் 170 . ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். லைகா புரோடக்ஷன்ஸ்ச் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் தலைவர் 170 படத்தின் படக்குழுவினரை வரிசையாக லைகா நிறுவனம் அறிவித்து வருகிறது. முதலில் படத்தின் இயக்குநர் த.செ ஞானவேல் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரின் பெயர்களை படக்குழு வெளியிட்டது. இதை தொடர்ந்து, தற்போது படத்தில் மூன்று நடிகைகள் இணைந்துள்ளதாக, படக்குழு அறிவித்துள்ளது.

ரஜினி படத்தில் மூன்று கதாநாயகிகள்... லைகா அறிவிப்பு

துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியார் உள்ளிட்ட நடிகைகள் படத்தில் இணைந்துள்ளனர். 

Share this story