தக் லைஃப் படத்தில் நடிக்க பல கோடிகளை சம்பளமாக வாங்கிய நடிகை .

கமல்ஹாசன் நடித்து கடந்த 5ம் தேதி ரிலீஸ் ஆன தக் லைஃப் படத்தில் நடிக்க த்ரிஷா 12 கோடிகள் சம்பளம் வாங்கியதாக கோடம்பாக்கத்தில் செய்தி உலா வருகிறது
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தக் லைஃப் படத்தில் த்ரிஷா நடித்திருக்கிறார்.. இந்த திரைப்படத்தில் சிம்பு, கமலஹாசன், ஜோஜு ஜார்ஸ், அசோக் செல்வன், அபிராமி என பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் வரும் 'சுகர் பேபி' பாடலுக்கு த்ரிஷா வெள்ளை நிற புடவையில் அட்டகாசமான டான்ஸ் ஆடி உள்ளார்
இந்த திரைப்படத்தில் த்ரிஷா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் நடிப்பதற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு த்ரிஷாவோட மார்க்கெட் ஏகத்துக்கும் ஏறி இருக்கு என்று தான் சொல்ல வேண்டும்.இந்த படத்தை தொடர்ந்து விஜய், அஜித், கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து 'கோட்' படத்தில் விஜய் உடன் இணைந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். ஒரே பாட்டுக்கு த்ரிஷா நடனமாடியாது கோட் படத்தில் மட்டும் தான்.இந்நிலையில் நடிகை த்ரிஷா தக் லைஃப் படத்தில் நடிக்க 12 கோடி சம்பளம் வாங்கியதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது .இதன் மூலம் கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான் .