"நாங்கள் அன்பால் நிறைந்தவர்கள்" -மோசமான விமர்சனத்துக்கு பாசமான பதிலடி கொடுத்த த்ரிஷா .

trisha
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் கில்லி படத்தில் நடித்தது முதற்கொண்டே நல்ல நண்பர்களாக பழகி வந்துள்ளனர் .இந்நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்தார் .இதனால் விஜயை விமர்சனம் செய்வதற்கு த்ரிஷாவோடு அவரை சம்பந்தப்படுத்தி சிலர் கமெண்ட் செய்தனர் .அதற்கு த்ரிஷா ஒரு பதிலடி கொடுத்துள்ளார்  
விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஆரம்பம் முதலே நல்ல நண்பர்கள். இவர்கள் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘கில்லி’ படத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தார்கள். அதன் பின்னர் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக இவர்கள் இருவரும் ‘லியோ’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அதன் பின்னர் ‘கோட்’ படத்தில் இருவரும் இணைந்து ஒரு பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினர். இந்த நிலையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு திரிஷா அவருக்கு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகத் தொடங்கியது. பலரும் விஜய் மற்றும் திரிஷா இருவரையும் இணைத்து வைத்து பேசத் தொடங்கினர். நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்க்களையும் பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு திரிஷா இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் பகிர்ந்து உள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றில், “நாம் அன்பால் நிறைந்திருக்கும் சமயத்தில், அது அசிங்கமான எண்ணம் கொண்டவர்களை குழப்புகிறது” என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையவாசிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.இது அவரை பற்றி தவறான விமர்சனம் செய்வோருக்கான பதில் என்று பலரும் கூறுகின்றனர் 

Share this story